Top Social Icons

விண்வெளியில் வேதம்



அறிவியலும்,  விஞ்ஞானமும், தொழில்நுட்பமும், வானளாவிய வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் பரிசுத்த வேதாகமத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா எனும் கேள்வி பல இடங்களில் இன்று சவாலாக கேட்கப்படும் ஒன்று.

சந்திரனுக்கு மனிதன் இறங்கி நடந்து  50 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போதுமா இதையெல்லாம் நம்புகிறீர்கள் என்றெல்லாம் கேலிப்பேச்சுகள் ஒருபக்கம் பேசினாலும்,
முதன்முதலில் அந்த சந்திரனுக்கு சென்றவர்களே இந்த வேதத்தை முற்றிலும் நம்பியவர்கள் என்பதுதான் உண்மை.

அதுபோல விண்வெளி களத்தில் முதன் முதலில் எடுத்து செல்லப்பட்ட புத்தகமும் பரிசுத்த வேதாகமமே.

ஏதோ நானும் எழுதுகிறேன் என்று எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாதல்லவா?
பல பார்வையாளர்கள் இதை மிக நுணுக்கமாக கவனிக்கிறார்கள்.

விண்வெளியில் வேதம் பற்றி எழுத வேண்டிய அவசியத்தால்  சரியான தகவல்களும் சேகரிக்க வேண்டியதால், அது சம்பந்தப்பட்ட  நூல்கள், மற்றும் நபர்கள், பற்றி படிக்க நேர்ந்த போது,
மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

ஆண்டவரின் அன்பை எண்ணும் போது
என்னையும் அறியாமல் கண் கலங்குகிறது.

Frank Boreman, முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற ஏவுகணை அப்பல்லோ-8ன் பைலட்.  (அப்ப்பா எவ்வளவு பெரிய விசுவாச வீரர்!! இவரை பற்றி அறிய தேவன் கொடுத்த தருணத்திற்காக அவருக்கு நன்றி.
அவர் படத்தை முதல் கமென்ட்டில் பதிவு செய்திருக்கிறேன்.)

Frank Boreman, Jim Lovvell, William Anders என்ற விண்வெளி வீரர்களால் அப்பல்லோ-8 என்ற விண்வெளி களத்தில் பரிசுத்த வேதாகமம் மைக்ரோபிலிமாக எடுத்து செல்லப்பட்டது.

1968ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் இரவு (24/12/1968) அன்று விண்வெளியிலிருந்து அப்பல்லோ-8 ன் விண்வெளி வீரர்கள் கொடுத்த பேட்டியில் அவர்கள் வாசித்த வார்த்தைகள் ஆதியாகமம்-1:1-10 "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" எனும் வேதத்தின் ஆரம்ப வார்த்தைகளே. அதோடு:

இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் பிறந்திருக்கிறார்.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
எனும் லூக்கா, மற்றும் ஏசாயா வின் வசனங்களை வாசித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதற்கு பின் இதுவரை எந்த மதப்புத்தகங்களோ, கொள்கை புத்தகங்களோ நிலவுக்கு எடுத்துச்செல்லப்படவில்லை.
இவ்விதமாக வான்வெளியிலிருந்து வாசிக்கப்பட்ட புத்தகத்தின் வார்த்தைகள் பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகள் மாத்திரமே.

அதேபோல் அவர்கள் பூமிக்கு திரும்பிய போது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,  Frank Boreman னிடம் உங்கள் வாழ்வின் சாதனையாக எதை கருதுகிறீர்கள்,
அல்லது எந்த நாட்களை உங்கள் வாழ்வின் பாக்கியமாக கருதுகிறீர்கள் என்று கேட்ட போது அவர் சொன்ன பதில்:
நான் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்பதையே என் வாழ்வின் மிகப்பெரிய பொக்கிஷமாகவும், இயேசு என் பாவங்களை மன்னித்து அவர் ரத்தத்தினால் என்னை நீதிமானாக்கிய நிமிடங்களையே என் வாழ்வின் பாக்கியமான நேரமாகவும் கருதுகிறேன் என்றும்,
இதில் என் சாதனை என்பது ஒன்றுமில்லை.
நான் எதையும் சாதித்துவிடவில்லை.
ஆனால்,
"என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு" என்று சொல்லியிருக்கிறார். 
மற்றவர்களும் அதை ஆமோதித்திருக்கிறார்கள்.

நான் விண்வெளி யிலிருந்த போது மிகவும் அதிகமாக உணர்ந்தது இதைதான் என்று சொல்லி

"Amazing Grace How sweet the sound
That saved a wretch like me;
I once was lost  but now I'm found
Was blind but now I see"

பாடியிருக்கிறார்.
நான் சொல்வது கற்பனை அல்ல, சரித்திரம்.

--------தொடரும்--------

(விருப்பமுள்ளவர்கள் ஒரு share செய்தால் உங்கள் நண்பர்களும் பயனடைய ஒரு வாய்ப்பாக அமையும்-நன்றி)
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...