Top Social Icons

மனித நேயமும் இயேசுவும்



பரிவு, அன்பு, கருணை, இரக்கம், நட்பு, குற்றம் பாராமை, பாகுபாடு பாராமல் உதவுதல், மொழி இனம் பாராமை இவற்றின் இன்ப ஊற்றே மனிதநேயம்!

பகைமை நீங்கி பரிவும் சகோதரத்துவம் வளர்க்கும், வளமை வளரும்,போர் சண்டை முதலியவை ஒழிந்து போகும்.

இயேசு ஆண்டவர் மனிதநேயம் போற்றுவராக வாழ்ந்தார்.

 "உன்னைப்போல் பிறனில் அன்பு கூறு'' இனவெறி, மதவெறி, ஏழை, பணக்காரன், ஏற்றதாழ்வு, அதிகாரம் அடிமை தனம் போன்ற கொடுமை நிறைந்திருந்த காலத்தில் இயேசு உலகம் முழுவதும் மனிநேயத்துடன் வாழ விரும்பினார்.

 தம் போதனையை நல்ல ஓர் உவமை கதையை கூறினார்.

ஒரு மனுஷன் எருசலேமிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்து கொண்டு அவனை காயப்படுத்திக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

அப்பொழுது தற்செயலாய் ஓர் ஆசாரியன் அந்த வழியே வந்து அவனைக் கண்டு பக்கமாய் விலகிப் போனான்.

அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டு பக்கமாய் விலகிப் போனான்.

பின்பு
சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில் அவனைக் கண்டு மனதுருகி அருகே வந்து அவனுடைய காயங்களில் எண்ணெய்யும் திராட்சை ரசமும் வார்த்து காயங்களைக் கட்டி அவனை தன் கழுதையின் மேல் ஏற்றி சத்திரத்துக்கு கொண்டு போய் அவனைப் பராமரித்தான்.

மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து சத்திரத்தான் கையில் கொடுத்து,

 "நீ இவனை விசாரித்துக் கொள். அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காக செலவழித்தால் நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றார். (லுக்கா:10: 10- 15).

இந்த உவமையில் மூன்று பேரை இயேசு குறிக்கின்றார்.

 அவர்களில் ஆசாரியன் என்பவர், தெய்வ பக்தியுள்ளவர். தினமும் ஆண்டவருக்கு தொழுகை செய்பவர். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தொடர்பாளர் ஆனாலும் அவர் உதவ மனமற்றவராக மனிதநேயம் இல்லாதவராக இருக்கின்றார்.

அடுத்ததாக,
 லேவியன் (ஆலய பணிவிடைக்காரர்) ஆண்டவர் ஆலய தொண்டே தம் பணி, வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணித்தவர்.
 இவரும் காயப்பட்டவனைக் கண்டு பக்கமாய் விலகி போனார்.

 ஆனால் தாழ்ந்த குலத்தவர் சமாரியன், மனதுருகி காயப்பட்டவனுக்கு உதவி செய்கின்றார்.

 அவன் அன்பு, பராமரிப்பு, உதவி - செலவு செய்தது, மருந்திட்டது போன்ற மனிதநேயம் பேசப்படுகிறது.

முகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம்.

 சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை.

இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு நண்பர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு...

சென்னை லயோலாவில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டுவிழாவில்,

ஒரு மாணவர் சிறப்பு பாராட்டை பெற்றார். அவர் செய்ததென்ன?

 இவர் சர்ச் பார்க் பள்ளியின் முன் பஸ்ஸுக்கு நின்றுகொண்டிருக்கும்போது அங்கே உடலெங்கும் சீழ்வடியும் புண்களோடு ஒருவர் அனாதையாகக் கிடந்தார்.

 அவரைப் பார்த்து எல்லோரும் முகம் சுளித்துக்கொண்டு, எங்கே அவன் உடலில்லிருந்து சீழும், கிருமியும், வீச்சமும் தங்கள் ஆடைகளை ஒட்டிக்கொள்ளுமோ என ஒதுங்கி நின்றபோது

 இவன் துணிந்து தன் கடமையை செய்தான். அந்த மனிதரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு ரிக்ஷாவில் வைத்து எடுத்துச் சென்று சேர்த்தான்.

இந்து நாளிதழில் இந்த செய்தி வந்தபோது கல்லூரியே பெருமை கொண்டது.

"அயலானை அன்பு செய்." இயேசு சொன்ன பொன்மொழிகளில் ஒன்று.

ஆங்கில மொழிபெயர்ப்பில் Love your neighbour எனத் தரப்பட்டுள்ளது.

தமிழில் அயலான் என்பது இன்னும் தொலைவில் உள்ளவரைக் குறிப்பதுபோலுள்ளது.

இயேசு ஆண்டவரும் மனிதர் மேல் அன்பு, பரிவு, நட்பு, மன்னிப்பு, குணமாக்கும் நல்ல சமாரியன் என்று போற்றப்படுகின்றார்.

 நாமும் நல்ல சமாரியனாக இருக்க வேண்டும் இயேசு விரும்புகின்றார்.

உலகம் மனிதநேயத்துடன் இருக்க வேண்டுமானால் ஒவ்வொகு தனி மனிதனும் மனித நேயத்தை செயல்படுத்த வேண்டும்.

தனி ஒரு மனிதன் மாற்றமே உலக மாற்றத்துக்கு வித்திடும்.

 நாம் நலம் பெற மனிதநேயத்துடன் நல்ல சமாரியனாக வாழ்வோம்...
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...