Top Social Icons

இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா



«யோவானின் ஸ்நானனின் பாடுகள்»

இருந்து பார்ப்போமா… சந்தித்து சாதிப்போமா..

• (மாற்கு 6:17-29).

அன்புமிக்கவர்களே! இன்று நாம் யோவான் ஸ்நானனின் பாடுகள் பற்றி சிந்திக்கிறோம். ஐயோ பாடுகளா? என பாடுகளைப் பார்த்ததும் பயந்து ஒளிந்துக் கொள்ளும் மனிதர்கள் வாழும் உலகம் இது. அவருக்கு எதற்காக பாடுகள்? எதற்காக அச்சுறுத்தல்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டார்?

அவர் நேர்மையோடும் தூய்மையோடும் இருந்தார். ஆகவே அவர் பாடுகளை சந்தித்தார். அதற்காகவே அவர் கொலை செய்யப்பட்டார். நாமும் அவரைப் போல இருந்து பாடுகளை சந்திப்பதே, கிறிஸ்துவுக்கு சாட்சியாவதே தேவன் விரும்புகிறார். பொய்யிலிந்து உண்மைக்கும், அசுத்தத்திலிந்து தூய்மைக்கும் கடந்து வருவதே தேவனின் விருப்பம்.

1⃣. நேர்மையோடு இருப்போமா..

யோவான் ஸ்நானன் உண்மையோடு இருந்ததற்காக பாடுகள். உண்மையோடு இருப்பது குற்றமாப்பா? ஆம். உண்மையோடு இருப்பது தான் குற்றம் இந்த உலகில். பொய்யை கொண்டிருந்தால் வாழலாம். ஆனால் உண்மையோடு இருந்தால் வாழ முடியாது. இது உலகின் கூற்று.

இதை உடைப்போம். நாம் பலர் உண்மையோடு வாழ்வோம். நேர்மையோடு வாழ்வோம். உறுதிமொழி எடுத்து உறுதியாய் இருப்போம்.

2⃣. தூய்மையோடு இருப்போமா…

யோவான் ஸ்நானன் தூய்மையோடு இருந்தற்காக மரணத்தண்டனையை அனுபவித்தார். தூய்மையோடு இருப்பது குற்றமாப்பா? ஆம். தூய்மையோடு இருப்பது தான் குற்றம் இந்த உலகில். அசுத்தத்தை கொண்டிருந்தால் வாழலாம். ஆனால் தூய்மையோடு இருந்தால் வாழ முடியாது. இது உலகின் கூற்று.

இதை உடைப்போம். நாம் பலர் சுத்தமாக வாழ்வோம். தூய்மையோடு வாழ்வோம். உறுதிமொழி எடுத்து உறுதியாய் இருப்போம்.

மனதில் கேட்க…

1⃣. நான் ஞானஸ்நானம் பெற்றது எதற்கு? உண்மையோடும் தூய்மையோடும் இருக்கத்தானே?.

2⃣. யோவான் ஸ்நானனை போல நான் உண்மையோடு இருந்து தூய்மையைச் சந்தித்து சாதிப்பேனா?

மனதில் பதிக்க…

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

• (எபேசியர் 1:4).
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...