Top Social Icons

எப்படியெல்லாம் நியாயந்தீர்க்கப்படுவார்கள் ?

நியாயத்தீர்ப்பில் பாவிகளானவர்கள்  எப்படியெல்லாம் நியாயந்தீர்க்கப்படுவார்கள்? 

அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, மேற்காணும் கர்த்தருடைய வசனங்கள் ஒவ்வொன்றும் மனிதன் செய்கிற  கிரியைகள், பேச்சு வார்த்தைகள் எதுவானாலும், அது நன்மையானாலும் தீமையானாலும் ஒவ்வொன்றைக் குறித்தும் நியாயத்தீர்ப்படைய காத்திருக்கின்றான். சர்வ வல்லமையுள்ள தேவன் தாம் நியமித்த நீதியின் தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போகிறார் என்பதை தெளிவாக போதிக்கிறது. நியாயத்தீர்ப்பின் வேளையிலே 7 விதமாக பாவநிலைகளில் உள்ளவர்களை தேவன் நியாயந்தீர்க்கப் போகிறார்.

1) தேவனுடைய கட்டளைகள் கற்பனைகள் ஏற்று தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்:

                    "தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்."

                       அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார். அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.9. அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.10. அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான். சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்." (ஆதியாகமம்.15:7-13)

                       "பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக்கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல வி
லங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்." (நியாயாதிபதிகள் 16 :2)

                     "என் ஜீவன் பெலிஸ்தரோடே கூட மடியக்கடவது" (நியாயாதிபதிகள் 16:30)

                     அன்பான தேவனுடைய பிள்ளைகளே மேலே காணும் கர்த்தருடைய வசனங்கள் ஏதேன் தோட்டமாகிய கர்த்தருடைய தோட்டத்தில் தேவனால் வைக்கப்பட்டிருந்த ஆதாமிற்கு தேவன் கொடுத்த கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் சாத்தானின் பொய்யான வார்த்தைகளை நம்பி, சாவை வருவிக்கக் கூடிய தேவனால் விலக்கப்பட்ட கனியைப் புசித்தான். தேவனுடைய கட்டளைகளை ஏற்று அதை முற்றிலுமாக நம்பி, எந்த சூழ்நிலைகளிலும் தன்னில் அதை காத்துக் கொள்ளாமல் ஆதாம் ஏவாள் ஆகிய இருவரும் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். (ஆதியாகமம். 3:11-19)

                  கல்தேய பட்டணமாகிய ஊர் எண்ணும் இடத்திலிஇடத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்து அத்தேசம் முழுவதை முழுவதையும் அவனுக்கு சுதந்திரமாக கொடுக்க சித்தங் கொண்ட தேவன் அதை ஆபிரகாமிடம் சொன்ன போது , அதை நம்பி கீழ்ப்படிய எண்ணாமல் தேவனுடைய வார்த்தையை எதினால் நம்புவேன் என்று நம்புவதற்கு அடையாளம் கேட்டான். நீடிய பொறுமையுள்ள தேவன் மூன்று வயது கிடாரி, மூன்று வயது வெள்ளாடு, மூன்று வயது ஆட்டுக்கடா, ஒரு காட்டுப்புறா, ஒரு புறாக்குஞ்சு ஆகியவற்றை கொண்டு வந்து பலி செலுத்தும்படியான கட்டளை பெற்றான்.  ஆனால் பலி செலுத்துவதிலும் கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படியாமல் பட்சியை துண்டித்து தேவனுக்கு பலி செலுத்தாமல் அதை தனக்கென்று வைத்துக்கொண்டு, செலுத்தப்பட்ட பலிகள் எல்லாவற்றையும், தனக்கென்று வைத்துக் கொண்ட பட்சியைக் கொண்டு எல்லா பலியையும் அசுத்தப்படுத்தி தேவனைப் பார்க்கக் கூடாமல் அயர்ந்த நித்திரையையும், திகிலையும், காரிருளையும் உடையவனாய் தண்டிக்கப்பட்டான். இவன் செய்த கீழ்ப்படியாமையால் இவனுடைய சந்ததியான யாக்கோபின் 12 கோத்திரத்தாரும் எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமைகளாக வாழ்வதற்குறிய தண்டனையையும் பெறுவதற்கு ஆபிரகாமே காரணமாயிருந்தான்.

                   அவன் தலையிதலையின் மேல்  சவரகன் கத்தி படலாகாது. அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான். அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார். "(நியா).13:5) தேவனுடைய கட்டளைகளை மீறி பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ண விரும்பினான்.
சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். (நியா.16; 4) தேவனுடைய சித்தத்தை நம்பி அதற்கு கீழ்ப்படிய மறுத்து தேவனுடைய வல்லமையை, பெலணை இழந்தான். எவர்களை அழிக்க ரட்சகனாக அனுப்பப்பட்டானோ அவர்களுக்கே அடிமையாகி, அவர்களுடைய ஜீவனோடு சேர்ந்து இவனும் அழிந்து போனான். தேவனுடைய கட்டளைகளுகட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அவைகளை ஏற்று நடக்காவிட்டால் தேவனுக்கு கீழ்ப்படாயாத பாவத்தினால் தேவன் இவர்களை நியாயந்தீர்க்கிறார். "தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, வருகிறார்.  " (2தெச.1:7-8, 1சாமு.15:22,23; யோசு.7:24-26; அப்போ.13:22)

        ஆனபடியினாலே இப்படிபட்டதான  தேவனுடைய கட்டளைகள் கற்பனைகள் ஏற்று தேவனுக்குக் கீழ்ப்படியாத யாவரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்:

2) தேவனை விசுவாசியாதவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்;
                      "அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." (யோவான்.3:18)

                      "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." (மாற்கு.16:16)

                    " இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார்." (யோவான்.11 :25,26)

                  " இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். " (லூக்கா1:20)

                  "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. " (எபிரேயர்.11 :1)

                 " இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். " (மத்தேயு.15:28)

                   " இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும்." (மத்.21.21)

                  " ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். " (யாக்கோபு. 1:6)

                 " வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ? " (யாக்கோபு 2 :20)

                 "அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படி செய்கிறது நல்லது தான்". (யாக்.2:19) நம்முடைய தேவன் காணப்படாதவராய் இருக்கிறார். அவரை மனுக்குலத்திற்கு காண்பித்தவர் அன்பின் ஆண்டவர் இயேசு ஒருவர் தான். "இந்த இயேசுவை தேவன் என்று விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்". (யோவான்3:18) "மார்த்தாள் இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து தன் சகோதரன் லாசருவை உயிரோடெழுந்திருக்கப் பெற்றாள். எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு  மரியாளைப் பார்த்து , " விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். " (லூக்கா.1:45) என்று வாழ்த்தின எலிசபெத்தும் ஒரு ஆண் குழந்தையை (யோவான் ஸ்நானகன்) பெற்றாள்.  " விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்." (எபி.11:6) என்ற கர்த்தருடைய வசனங்களெல்லாம் தேவனில் விசுவாசமுள்ளவர்களாய் தேவன்டத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கும் என்ற கர்த்தருடைய வசனங்களெல்லாம் நாம் தேவன்டத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கும்படி அழைக்கப்படுகின்றோம். தேவனை விசுவாசியாதவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு என்று நாம் அறிவிக்கப்படுகின்றோம் " இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.  பசியாயிருந்தேன், (ஆத்தும பசி) நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை: தாகமாயிருந்தேன், (ஆத்தும தாகம்) நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை, அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை,." (மத்.25:41-43) என்ற வசனம் அன்பின் ஆண்டவருடைய அழைப்பை ஏற்று விசுவாசிக்காதவர்களை இடது புறத்திலிருந்த வெள்ளாடுகளாக நியாயந்தீர்த்து அக்கினிக் கடலிலே போடப்படுகிறார்கள். ஆபிரகாம் தேவனை விசுவாசித்து " தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்." (எபிரேயர்.11:10) நாமும் அன்பின் தேவன் மேல் விசுவாசத்தோடு நம்முடைய விசுவாச வீட்டைக் கட்டி அவருடைய சீயோனில் பிரவேசிக்க ஆயத்தமாகுவோம்.
       
              அப்படியாக தேவனை விசுவாசியாத கிறிஸ்தவர்கள், இந்துக்கள்,  முஸ்லிம்கள் ஏனைய மதத்தினர் யாவரும், இயேசுவே நம்மை உண்டாக்கிய தேவன்,மீட்பர் என்பதை ஏற்றுக்கொள்ளாததால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

3) பெருமையுள்ளவர்களும்,பிறரை அற்பமாய் எண்ணுகிறவர்களும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்;
                   " பரிசேயன் நின்று: தேவனே! நான் பரிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்." (லூக்கா.18:14)

                      " நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். " (1பேதுரு.5:5)

                      " அகந்தை வந்தால் இலச்சையும் வரும்: தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு." (நீதிமொழிகள்.11:2)
 
                      " கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்: மேன்மைக்கு முன்னானது தாழ்மை. " (நீதிமொழிகள்.15:33)

                      " இகழ்வோரை அவர் இகழுகிறார்: தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். " (நீதிமொழிகள்.3:34)

                      " இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. " (தானியல்.4:30,31)

                     " அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும். என்று எழுதினான் " (தானியல்.4:37)

                     " அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்." (ஆதியாகமம்.16:4,9)

                        அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, மேற்காணும் கர்த்தருடைய வசனங்களெல்லாம் பெருமையுள்ளவர்களை தாழ்த்துகிறதும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையினால் உயர்த்துகிறதையும் நமக்குப் போதிக்கிறது.  பரிசேயன் தன்னையும் தன் பரிசுத்தத்தையும், தான் பலிசெலுத்துகிறதின் மேன்மையையும் பெருமையாகத் தேவனிடம் தெரிவிக்கின்றான். அதே வேளையில் ஆயக்காரன் தன் மார்பில் அடித்துக்கொண்டு "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று தேவனை நோக்கி ஏறெடுக்கவும் துணியாமல் தன்னைத் தாழ்த்தி ஜெபத்தை ஏறெடுக்கிறேன். அன்பின் ஆண்டவர் உடனே நியாயந்தீர்க்கிறார். பரிசேயன் அல்ல; ஆயக்காரனே நீதிமான் என்று இவனை மேன்மைப்படுத்தி ஆசீர்வதிக்கிறார். சாராளினிமித்தம் ஆபிராமிடம் கர்ப்பவதியான ஆகார், தான் கர்ப்பவதியானதை கண்ட அவள் தன் நாச்சியாரை அற்பமாக எண்ணின அவளை தேவன் " நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்." (ஆதியாகமம்.16:9) என்று ஆகாரைத் தேவன் தாழ்த்தினார். நேபுகாத்நேச்சார் தான் பேர் மேன்மைக்காக கட்டி உண்டாக்கின மகா பாபிலோன் என்று மேட்டிமையாகப் பெருமையாகப் பேசின அவ்வார்த்தை அவன் வாயிலிருக்கும் போது அவன் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு அவனுடைய ராஜ்யபாரத்தையே இழந்து தண்டிக்கட்பட்டான். மேற்காணும் கர்த்தருடைய வசனங்களெல்லாம் நாம் மனத்தாழ்மையைத் தரித்துக் கொண்டு மற்றவர்களை குறைவாய், இழிவாய் எண்ணாமல் இருந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். அப்படியல்லாத யாவரும் நியாயந்தீர்க்கப்பட்டு அநீதிமான்களாய் தண்டிக்கப்படுவார்கள்.

             ஆனபடியினாலே பெருமையுள்ளவர்களும், பிறரை அற்பமாய் எண்ணுகிறவர்களும் தேவனுடைய ஏழு விதமான நியாயத்தீர்ப்புகளில் மூன்றாவதாக நியாயந்தீர்க்கப்படுவார்கள்;

4) தேவாதி தேவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசி குற்றப்படுத்துகிறவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்:-

                    " புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு. அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே. " (தீத்து.3:9-11)

                 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்." (2தீமோ.4:2-4) " இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். " (2பேதுரு.2:12)

                       "அதின் ஆசிரியர் என் வேதத்துக்கு அநியாயஞ் செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்த குலைச்சலாக்குகிறார்கள். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாதற்கும் வித்தியாசம் பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து என் ஒய்வு நாட்களுக்குத் தங்கள் கண்களை முடிக் கொள்கிறார்கள். அவர்கள் நடுவிலே கனஈனம் பண்ணப்படுகிறேன். அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள், அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார்." (எசேக்கியல்.22:26,27,31)

                    " மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும். அவன் புய முழுவதும் சூம்பிப்போம். அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்." (சகரியா.11:17)

                   " ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்." (1பேதுரு.4:11)

                   "அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, மேலேகாணும் சத்திய வசனங்களெல்லாம் கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பற்றியதாயிருக்கிறது.  "சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு." (2தீமோ.4:2)  " ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்." (1பேதுரு.4:11) என்று அன்பின் ஆவியானவர் கூறுகிறார். ஆனால் வேதவசனத்தை அறியாதபடி, அறிந்து கொள்ள ஜெபத்தின் மூலம் முயற்சித்து தெரிந்து கொள்ளாதபடி தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து போகிறவர்கள் அநீதத்தின் பலனை அடைவார்கள்."  (2பேதுரு.2:12) கர்த்தருடைய வருகைக்குரிய சத்தியங்களை சபைக்கு அறிவித்து பூரண பரிசுத்தமடைந்து மணவாளன் இயேசுவோடு சேர்ந்து கொள்வதற்குரிய ஊழியம் செய்யாமல், மந்தையை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக்காமல், " மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும். அவன் புய முழுவதும் சூம்பிப்போம். அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்." (சகரியா.11:17) இவ்வசனத்தின்படியான ஊழியக்காரர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.

5) ஐசுவரியவானுக்கும் தரித்திரனுக்கும் நியாயத்தீர்ப்பு:-

                     "ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான், அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான், அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து.... பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்..... அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்." (லூக்கா16:19,20,22,25)

                  "இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு,என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப் பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி, ஜசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்." (மாற்கு.10:23)

                    "செல்வம் என்றைக்கும் நிலையாது: கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலை நிற்குமோ?".(நீதிமொழிகள்.27:24)

                    "கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். " (நீதிமொழிகள்.11:4)

                       "சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு, அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது, அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான், அவன் கையில் யாதொன்றும் இல்லை. தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான், வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான், அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. அவன் வந்தபிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு, அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன? ." (பிரசங்கி.5:13-16)

                    அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நடைபெற இருக்கிற நியாயத்தீர்ப்பானது ஐசுவரியவானுக்கும் தரித்திரனுக்கும் உண்டாகிற நியாயத்தீர்ப்பாகும். அன்பின் ஆண்டவர் ஐசுவரியவானை பார்த்து நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய் என்று கூறுகிறார்.  இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.  அவன் மரித்தபோது பாதாளத்தில் அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுகிறேன் என்று ஐசுவரியவான் கூறியதாக அன்பின் ஆண்டவர் கூறுகிறார். ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைத்து தேவனை மறந்த வாழ்க்கை வாழ்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்பின் நாளிலே இரண்டாம் மரணமாகிய அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள்.  லாசரு என்ற தரித்திரன் பூமியிலே வாழ்ந்த காலத்தில் பசியையும், பருக்கள் நிறைந்த சரிரத்தையும் உடையவனாய் ஐசுவரியவானின் வாசற்படியிலே கிடைந்து தன் பசியை ஆற்றினான். துன்பம், வியாதி, பசி, பட்டினி யாவற்றின் மத்தியிலும் ஆபிரகாமின் மடியில் தேவதூதர்களால் கொண்டு போய் விடுவதற்குரிய தேவ பக்தி, விசுவாசம் எந்த நிலையிலும் தேவனை மறுதலிக்காமல் தேவனுக்குள் சந்தோஷமாக வாழ்ந்தபடியால் மரணத்திற்கு பின்பு ஆபிரகாமின் மடியில் அமர்ந்து தேவனால் வாழ்த்தப்பட்டான்.

                  நித்திய ஜீவனை வாஞ்சித்த யூத வாலிபனாகிய ஐசுவரியவான் நியாயப்பிரமாணங்கள் யாவற்றையும் பின்பற்றினவனாய் சாட்சி கொடுக்கிறான். ஆண்டவர் அவனுக்குண்டான ஐசுவரியத்தின் மேல் இருக்கும் ஆசையினால் நித்திய ஜீவனை அடைவதற்குரிய பூரண பரிசுத்தம் இல்லாததை அறிவித்து அவனுக்குண்டான யாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடுத்து தன்னை வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்றிவா என்கிறார். " அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். " (மாற்கு10:22) இந்த கர்த்தருடைய வசனமானது, மிகுந்த ஆஸ்தியையுடைய வாலிபனுக்கு, இயேசுவின் சமூகமும், நித்திய ஜீவிய வாழ்க்கையும் ஐசுவரியத்தைக் காட்டிலும் அற்பமாக தோன்றுகிறது. மாயையான இந்த உலகம் மேன்மையாக காணப்படுகிறது. ஆகையினாலே மனமடிந்து துக்கத்தோடே திரும்பி போய்விட்டான் என்பதை பார்க்கிறோம். ஐசுவரியத்தின் மேல் ஆசை கொள்ளுகிற ஒருவரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்று தேவன் நியாயத்தீர்ப்பு செய்கிறார். " ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்ந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்." (யாக்கோபு.5:1-3) "பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது..." (1தீமோ.6:10) என்ற வசனங்களெல்லாம் ஐசுவரியம் மனிதனை தேவனுக்குகந்தவனாய் மாற்றாது. அது அவனுக்கு தீமையை வருவித்து நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்துகிறது.

6) பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுதலும் பாவிகள் கைவிடப்படுதலும்:-

                       "ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்".  (1தெசலோ4:16)

                      " ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள், அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது." (வெளிப்.12:6,14)

                 " அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள், ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்." (மத்தேயு.24:41,42)

                 " மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (யோவான்.5:25)

                   "இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம்." (1கொரிந்தியர்.15:52)
                   "நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்." (2கொரிந்தியர்.3:18)

                 " பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்." (1யோவான்.3:2)

               " பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்." (தானியல்.12:2)

                அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, 6-வது நியாயத்தீர்ப்பாக பூரண பரிசுத்தமடைந்தவர்களை மணவாளனாகிய இயேசு தம்முடைய பூரண பரிசுத்த மகிமையின் மறுரூபத்தை அடைந்துக்கொள்ளக் கூடிய மணவாட்டியைச் சேர்த்துக் கொள்ள தம்முடைய பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும், தூதர்களுடைய சத்தத்தோடும் பிதாவின் வலது பரிசத்தில் புறப்பட்டு ஆகாயமட்டும் வந்திருக்கும்போது, தேவ எக்காள சத்தத்தைக் கேட்ட கிறிஸ்துவுக்குள் மகிமையின் மறுரூபத்தை அடைந்திருந்த மணவாட்டி ஆகாயமட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறாள். இதில் முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்து இளைப்பாறிக் கொண்டிருக்கும் பரிசுத்தவான்களுடைய கல்லறைகள் திறந்து பரிசுத்தவான்கள் எழும்பி ஆண்டவர் இயேசுவோடு ஆகாயத்தில் சேர்ந்து கொள்கிறார்கள்.  பின்பு உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே மகிமையின் மேல் மகிமையடைந்து மணவாளன் இயேசுவோடு சேர்ந்து கொள்ளுகிறார்கள்.

                 அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு ஆட்சியில் முதல் 3 1/2  ஆண்டுகாலம் முழுவதும் புற ஜாதியார்கள் மீட்கப்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட காலம், உபத்திரவத்தின் பூரண விசுவாசம் , பரிசுத்தம், மகிமை, மறுரூபமடைந்த பரிசுத்தவான்கள் மகிமையின் மறுரூபமடைந்து வனாந்தரத்திற்குப் பறந்து போய் விடுகிறார்கள். அதாவது முதல்3 1/2 ஆண்டு காலத்தில் சபையாய் ஆயத்தமாகி பூரணமகிமையடைந்த பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். "  அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள், ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்." (மத்தேயு.24:41,42) என்ற கர்த்தருடைய வசனம் சபையில் உள்ள பூரணமடைந்த பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். சபையில் பூரணமடையாதவர்கள் கைவிடப்படுவார்கள். என்ற தேவதிட்டத்தை நமக்கு தெளிவாக அறிவிக்கிறது.

                அந்திக்கிறிஸ்துவின் முதல் 3 1/2 ஆண்டின் இறுதி வேளையில் இந்த எடுத்துக் கொள்ளப்படுதல், கைவிடப்படுதல் சம்பவம் நடக்கிற புறஜாதிகளுக்கு கிருபையாய் மனந்திரும்புவதற்கென்று கொடுக்கப்பட்ட கிருபையின் காலம் இதோடு நிறைவு பெறுகிறது.  பூரண பரிசுத்தமடைந்தவர்கள் அந்திக்கிறிஸ்துவின் பின் 3 1/2 ஆண்டுகாலமான மகா உபத்திரவத்தின் காலத்தில் வனாந்தரத்தில் மறைவிடத்தில் வைத்து போஷிக்கப்படுகிறார்கள்.   " அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று." (வெளிப்.12:17) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி சபையில் கைவிடப்பட்டவர்கள் மகா உபத்திரவ காலமான அந்திக்கிறிஸ்துவின் பின் 3 1/2  ஆண்டுகளில் அந்திக்கிறிஸ்துவோடு நடக்கும் போராட்டத்தில் ஜெயம் பெற்று கிறிஸ்துக்கென்று இரத்தசாட்சியாய் மரிப்பார்கள். இவர்கள் கர்த்தருடைய இரகசிய வருகையில் சேர்ந்து கொள்வார்கள். சாத்தானோடு உண்டான யுத்தத்தில் தோல்வியடைந்தவர்கள் ஆண்டவரின் பகிரங்க வருகையில் நியாயந்தீர்க்கப்பட்டு அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள்.

              ஆகையால் புற ஜாதிகளிலிருந்து மீட்கப்பட்ட பூரண பரிசுத்தவான்கள் மறுரூபத்தின் வழியாய் வனாந்திரத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதும், பூரணமடையாதவர்கள் கைவிடப்படுவதுமே 6-வது நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. இது நடக்கும் காலம் அந்திக்கிறிஸ்துவின் முதல் 3 1/2 ஆண்டின் இறுதியில் நடக்கும் நியாயத்தீர்ப்பாகும்.

7) ஜெயங்கொண்டவர்கள் நித்தியத்திற்கும், பாவிகள் நித்திய நரகத்திற்கும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்:-

"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக்கொடுப்பேன்.(வெளி2:7)

"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்." (வெளிப்.3:12)

"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்." (வெளிப்.3:21)

"ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்." (வெளிப்.3:5)

"ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்." (வெளிப்.2:26)

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது." (2:11)

"ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது." (வெளிப்.2:17)
"இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்." (வெளிப்.21:24)

"அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள், அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது, விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை, தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்." (வெளிப்.22:4,5)

" வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்தவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்." (தானி.7:27)

"தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." (வெளிப்.21:27)

"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான், நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." (வெளிப்.21:7)

"அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்." (மத்தேயு.25:34)

ஜெயங்கொள்ளாத பாவிகள்:-
"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." (வெளிப்.20:15)

"நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்." (வெளிப்.22:15)

"தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.." (2தெச.1:7,10)

"தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார். " (யூதா.1:6)

"அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். " (மத்தேயு.25:41)

அன்பான தேவனுடைய பரிசுத்த ஜனமே, ஜெயங்கொள்ளுகிறவனுடைய ஆவிக்குரிய தகுதியானது, " மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." (எபேசியர்.4:24) " தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே." (கொலோசெயர்.3:10) "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்." (மத்தேயு.5:48) " அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். " (எபேசியர்.3:19)
மேற்காணும் கர்த்தருடைய வசனங்கள் மீட்கப்பட்ட தேவனுடைய பரிசுத்தவான்கள் தேவனாகிய கிறிஸ்துவின் பரிபூரண பரிசுத்தத்தைப் பெற்றுக் கொண்டு, தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலையும் ரூபத்தையும் மகிமையும் அணிந்து கொண்ட புதிய பரிசுத்த மனிதனாகக் காணப்பட வேண்டும். "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக காணப்பட வேண்டும்." (எபே.5:27) இந்த மேன்மையான பூரண பரிசுத்தமாகுதலடைந்து கொண்ட பரிசுத்தவான்களை, " நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்." (2கொரிந்தியர்.3:18) என்ற வசனத்தின்படி மகிமையுள்ள கர்த்தரை கண்ணாடியிலே பார்ப்பதைப் போல முகமுகமாய்க் கண்டு ஆவியாயிருக்கிற கர்த்தருடைய மகிமையின் சாயலை அடைந்து கொள்ள செய்கிறார். மறுரூபமடைந்தவர்களே மணவாட்டியாய் ஆகாய மட்டும் வருகிற மணவாளனோடு சேர்ந்து கொண்டு "இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். " (1தெசலோ4:17) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி அது முதற்கொண்டு மணவாளன் இயேசுவோடு சேர்ந்து கொண்டு ஆயிரம் வருட அரசாட்சியிலும், அர்மகெதோன் யுத்ததிலும் ஆண்டவர் இரண்டாம் வருகையென்ற பகிரங்க வருகையிலும், அன்பின் ஆண்டவரின் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிலும் ஆண்டவரோடு இருந்து மரித்த பாவிகளான யாவரையும் நியாயந்தீர்த்து, அன்பின் இயேசுவோடு தேவனுடைய வாசஸ்தலமாகிய, " நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே (சீயோனாகிய நித்தியம்) நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். " (யோவான்.14:3)
"வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்." (மத்தேயு.25:34) "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது." (வெளிப்.2:7) "அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள், அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்." (வெளிப்.22:4) என்ற கர்த்தருடைய வசனங்களின்படி பூரண பரிசுத்தமும், மகிமையின் மறுரூபமும் அடைந்த இந்த ஜெயங்கொண்ட பரிசுத்தவான்கள் நித்தியத்தில் தேவனோடு என்றென்றும் வாழும் சிலாக்கியத்தை பெறுகிறார்கள். இவர்களுக்கு நியாயத்தீர்ப்பு இல்லை. இவர்கள் பாவிகளையும் உலகத்தையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள். பாவிகளாய் வாழ்ந்த யாவரும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையென்ற பகிரங்க வருகையில் மரித்த ஆத்துமாக்களாய் வெள்ளை நியாயசிங்காசனத்திற்கு முன்பாக, "யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். " (வெளிப்.20:13) "ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." (வெளிப்.20:15) "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். " (மத்தேயு.25:41) மேற்காணும் கர்த்தருடைய வசனங்கள் பாவிகளை அவரவர் கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட்டு இரண்டாம் மரணமாகிய அக்கினிக்கடலிலே போடப்பட்டார்கள். என்ற தேவத்தீர்மானத்தை அறிந்த தேவ ஜனங்கள் மேற்காணும் 7 விதமான நியாயத்தீர்ப்புகளுக்குரிய அத்தனை பாவங்களுக்கும் நிங்களாகி கிறிஸது இயேசுவின் சகந்தையை தரித்துக்கொண்டு பூரண பரிசுதவான்களாக ஜீவித்து கர்த்தருடைய இரகசிய வருகையில் பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபையாக ஆயத்தமாகி மணவாளன் இயேசுவோடு சேர்ந்து கொண்டு நித்தியத்தை சுதந்தரித்துக்கொள்வோமாக.
"இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்." (வெளிப்.22:20)
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...