Top Social Icons

இன்று பேராயர் ராபர்ட் கால்டுவெல் நினைவுநாள்


இடையன்குடி மண்ணைவிட்டு அவர் ஆவி பிரிந்து 126 ஆண்டுகளாகிவிட்டது. ஆனாலும் அவரை மறக்க முடியவில்லை.
வரலாறில் அவர் பதித்த தடம் ஆழமானது, அழிக்க முடியாதது.

அயர்லாந்திலிருந்து இடையன்குடி மண்ணுக்கு வந்தவர் சென்னையிலிருந்து கால்நடையாக வந்து இயேசுவின் சுவிசேஷத்தை இந்த மண்ணில் விதைத்தார். பனங்காடுகளிலும், தேரிமண்ணிலும் அவர் அறிவித்த சுவிசேஷம் எதிரொலித்தது. மரங்களிலிருந்து வீழ்ந்த பழங்கள், மழை விழுந்ததும் முளைத்தெழுவதைப் போல அவர் விதைத்த சுவிசேஷ விதைகளும் வளர்ந்தது.

மொழிகளை ஆராய்ந்த அவர், தமிழின் தனித்தன்மையையும், நிகரற்ற அதன் வீச்சையும் கண்டுபிடித்து தமிழே திராவிட மொழிகளுக்குத் தாய் என நிறுவினார். தமிழுக்கான ஒப்பிலக்கணத்தை அதாவது Comparative Grammar ஐ எழுதினார். தமிழ்கூறும் நல்லுலகம் இன்று அவரைக் கொண்டாடுவதற்கான காரணம் அதுதான்!

கால்டுவெல் ஒரு சுவிசேஷகராக இருந்து, இடயன்குடி பகுதியில் அநேக மக்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். இன்றய இடயன்குடியின் ஒழுங்குமிக்க  தெருக்களும், அழகிய ஆலயமும் அவர் உருவாக்கியதுதான்!

 அயர்லாந்து பாணியில் கட்டப்பட்ட அவ்வழகிய ஆலயக்கட்டிடத்தின் சிறப்பு அதன் கோபுரத்தின்
"ஜாய் பெல்"லில் இருக்கிறது!

கால்டுவெல்லின் சகோதரன், தன் அண்ணன் இந்தியாவில் ஆலயம் கட்டுகிறார் என்றதும் அன்பளிப்பாகக் கொடுத்தவை இந்த நான்கு மெகா சைஸ் மணிகள்! இன்று பாடல்களை அப்பெரிய மணிகளில் அழகாக இசைக்கும் சிறுவர்கள் அங்கு உண்டு! தனித்திறமையும், பெரும் பிரயாசமும் இருந்தால்தான் அவற்றைக் கையாள முடியும்! ஒருமுறை நேரில் சென்று பார்த்துவர முயற்சி செய்யுங்கள்!

பழைய பனையோலைச்சுவடிகளில்
இருந்த சங்க இலக்கியங்களை ஆய்ந்த அவர் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டார்!
அகழ்வாராய்ச்சிப் பணிகளில் பயிற்சி பெறாதவராக இருந்தாலும், பல அகழ்வாராய்ச்சி பணிகளை நெல்லைமாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்! அவற்றின் பயனாய் "A Political and General History of the District of Ti runelvely"     
என்ற புத்தகத்தை அவர் எழுதினார்! 1881ல் கவர்ன்மெண்ட் ஆஃப் மெட்றாஸ் ப்ரெசிடென்சி அதை வெளியிட்டது!

அவரின் புத்தகங்களும், எழுத்துக்களும், பேருரைகளும் பின்வந்தவர்களுக்கு பொக்கிஷமாயின! சுவிசேஷத்துக்காய் பிரதானமாகவும், தமிழர்களை அளவுகடந்து நேசித்ததால் தமிழுக்கும் தொண்டுசெய்த பேராயர் கால்டுவெல், தான் அதிகம் நேசித்த கர்த்தரண்டை இதே நாளில் சென்றுவிட்டார்!
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...